டெல்லி: தலைநகர் டெல்லியில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையில் ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. நாட்டின் தலைநகர் டெல்லியும் கொரோனாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை.
டெல்லியில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு 2 நாட்கள் தான் ஆகிறது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,500 ஆக அதிகரித்துள்ளது.
பலி எண்ணிக்கை 166ஐ எட்டியுள்ளது. 265 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர். ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பிலிருந்து 4,750 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில், டெல்லி 4ம் இடத்தில் உள்ளது. பட்டியலில் 35058 கொரோனா பாதிப்புடன் மராட்டியம் முதல் இடம் வகிக்கிறது. 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. 3வது இடத்தில் குஜராத் உள்ளது.