டில்லி,
புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் நாளை முதல் புழக்கத்திற்கு வந்துவிடும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
அரசு அறிவிப்புக்கு பிறகு, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை யாரேனும் வாங்கினால், அது அவர்களின் தனிப்பட்ட முடிவாகவே கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது,
புதியதாக வெளியிடப்படும்  500 மற்றும் 2000 ரூபாய்  நோட்டுக்கள் மிகவும்  பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது என்றார். மேலும்  இதேபோன்று கள்ள நோட்டுக்கள் அச்சிடப்பட முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்கள் பொருந்தியது என்று கூறினார்.
மேலும், புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அடையாள அட்டை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்ட்டார்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவதற்கு வசதியாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
new-ruppes
பிரதமர் மோடியின்  500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால்  நாடு முழுவதும் பொது மக்களிடையே அதிர்ச்சியும் பெரும் பரபரப்பும்  ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இதுகுறித்து யாரும் பீதி அடைய வேண்டாம் என்று அரசு அதிகாரிகள் முதல் ஜனாதிபதி வரை அனைவரும் மக்களுக்கு உறுதி சொல்கிறார்கள்.
ஆனால், நடை முறைச்சிக்கல் ஏற்படும்போது… பாதிக்கப்பட்டுவது பொதுமக்கள்தான்.
இதுபோன்று பிரச்சினைகள் ஏற்படாதவாறு புதிய நோட்டுக்கள் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே அச்சடிக்கப்பட்டு, வங்கிகளுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காகவே 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என திடீரென அறிவித்ததாகவும், நாட்டில் உள்ள முடக்கி வைக்கப்படுள்ள கருப்பு பணங்கள் இதன் மூலம் முற்றிலும் பயனற்றதாக போகும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்திருப்பதின் மூலம் அடுத்த சில வாரங்களில் வருமான வரியை செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது.
மேலும் அடுத்த 4 முதல் 5 வாரங்களில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வழக்கம் போல் புழக்கத்திற்கு வந்துவிடும் எனவும், நாடு முழுவதும் நிலமை சரியாகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் அறிமுகம் செய்யப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.