டில்லி,
1000, 500 ரூபாய்களை ஏற்க மறுக்கும் பெட்ரோல் பங்க் உரிமம் ரத்து செய்யப்படும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று இரவு முதல் 500ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததும் பொது மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
மாதத்தின் முதல் வாரம் என்பதால் அனைவரிடம் சம்பள பணம் இருப்பது வழக்கம். ஆனால் அந்த பணத்தை உபயோகப்படுத்த முடியாமலும், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாமலும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
ஆனால் பிரதமர் தனது உரையில், ரெயில் நிலையம், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகளில் 500, 1000 ரூபாய்கள் செல்லும் என்று அறிவித்தார்.
ஆனால், ரெயில்வே நிர்வாகமோ, 500, 1000 ரூபாய்களை கொண்டு வராதீர்கள் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மருத்துவமனை நிர்வாகமோ பணம் வாங்க மறுக்கிறது.
பெட்ரோல் பங்கும் வந்தவரை லாபம் என்று பணத்தை பிடுங்கி வருகிறது. 500 ரூபாய் கொடுத்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் கேட்டால் மீதி 400 ரூபாய் இல்லை என்று சொல்லி, மீதி 400 ரூபாய் கபளிகரம் செய்துவிடுகின்றனர்.
இன்று காலை முதல் எந்த பெட்ரோல் பங்க் சென்று 500 ரூபாய் கொடுத்து பெட்ரோல், டீசல் போடச்சொன்னால் மீதி பணம் கேட்காதே என்று சொல்விடுகிறார்கள். அல்லது சில்லரை எடுத்துவா என்கிறார்கள்.
எக்காரணம் கொண்டும் ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் 100 ரூபாய்கோ, 200 ரூபாய்க்கோ எரிபொருள் கேட்டால் தர மறுக்கிறார்கள். அதை மீறி கேட்பவர்களுக்கு பேலன்ஸ் பணம் தர முடியாது என்று கூறி வருகிறார்கள்.
இன்று காலை முதலே பெரும்பாலா பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒருபுறம், ஆட்டோ டிரைவர்கள் ஒரு புறம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதும், ஆங்காங்கே பிரச்சினை வருவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் பங்குகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
ஆனால், மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான், தற்போதுதான் பெட்ரோல் பங்க உரிமை யாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் பங்க் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.