சென்னை: தமிழக முதல்வராக 6-வது முறையாக பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகம் சென்றார். முதன் முறையாக முக்கிய கோப்புகள் எவற்றில் அவர் கையெழுத்திடுவார என்று பலவித யூகங்கள் எழுந்தன.
உயர் அதிகாரிகள் வட்டார தகவலின்படி, “டாஸ்மாக் கடைகளின் நேரத்தைக் குறைப்பது குறித்த கோப்பில் இன்று ஜெயலலிதா கையெழுத்திடுவார்” என்று கூறியிருந்ததை நேற்று நமது patrikai.com இதழில் வெளியிட்டிருந்தோம். மேலும் முதல் 100 யூனிட் வரை மின்சாரக் கட்டணம் ரத்து செய்யப்படும் கோப்பிலும் கையெழுத்திடுவார் என்று எழுதியிருந்தோம்.
அதோ பல மதுக்கடை நேரத்தை குறைத்து உத்தரவிட்டு கையெழுத்திட்ட முதல்வர் ஜெயலலிதா, 500 மதுக்கடைகளை மூடும் உத்தரவிலும் கையெழுத்தட்டார். இதன்படி இனி பகல் 12 மணிக்கே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்.
மேலும் கூட்டுறவு வங்கிகளில் கடந்த மார்ச் 31-ந் தேதிவரை சிறு, குறு விவசாயிகள் பெற்றிருந்த அனைத்து வகையான பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும், விசைத்தறிகளுக்கு 750 யூனிட் வரையிலான மின்சாரத்துக்கு கட்டணம் இல்லை, கைத்தறிகளுக்கு 200 யூனிட் வரையிலான மின்சாரத்துக்கு கட்டணம் இல்லை – தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் ரூ50 ஆயிரம் நிதி உதவியுடன் 4 கிராமுக்கு பதில் 8 கிராம் தங்கம் வழங்கப்படும் ஆகிய உத்தரவுகளில் ஜெயலலிதா இன்று கையெழுத்திட்டார்.