கோபனாவன்:

டென்மார்க் நாட்டில் உள்ள நோர்ப்ரோ  என்ற  மது தயாரிப்பு நிறுவனம், புது வகையான பீரை தயாரிக்க திட்டமிட்டது. இந்த பீர் தயாரிக்க, இசை விழா ஒன்றில்,  ஐம்பதாயிரம் லிட்டர் மனித சிறுநீர் சேகரிக்கப்பட்டும் என்றும் அறிவித்தது. அதன்படி சேகரிக்கவும் செய்தது.

இந்த நிறுவனத்தின் அறிவிப்பைக் கேட்ட பொது மக்கள், அதிர்ச்சியும் அருவெறுப்பும் அடைந்தார்கள்.  மனித சிறுநீரைக்கொண்டு பீர் தயாரிப்பதா என்று ஆத்திரத்துடன் கேள்வி கேட்டார்கள்.

மது தயாரிப்பு நிறுவனமான நோர்ப்ரோ, தங்களது புதுவைக பீரான பிஸ்னர் பீரில்  எந்தவித மனிதக் கழிவுகளும் இல்லை என்று விளக்கம் அளித்தது. அதாவது, இந்த பீரில் பார்லி பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக பார்லி சாகுபடியில், மாட்டுச்சாணம் அல்லது ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படும். தாங்கள், இந்த இரண்டுக்கும் பதிலாக, மனித சிறுநீரை உரமாகப் பயன்படுத்தி பார்லி சாகுபடி செய்தோம். அவ்வளவுதான் என்று விளக்கம் அளித்துள்ளது.

“மனிதக்கழிவுகளை உரமாக பயன்படுத்துவது ஒரு புதிய உத்தியாகும்.  இந்த உத்திக்கு ”பீர் சைக்ளிங்” என்று பெயர” என்கிறார் நோரேப்ரோவின் தலைமை இயக்குனர் ஹென்ரிக் வாங்.

மேலும், “50 ஆயிரம் லிட்டர் சிறுநீர் பயன்படுத்தப்பட்டு விளைவிக்கப்பட்ட பார்லியில் இருந்து, அறுபதாயிரம் பீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்றும் தெரிவிக்கிறார்.

சிறுநீரை குடிநீராகவும், உரமாகவும் மாற்றும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளதாக கடந்த ஆண்டே பெல்ஜிய பல்கலைக்கழகத்தின் ஒரு குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.