சர்சோரெம்:

தெற்கு கோவாவில் சர்சோரெம் என்ற இடத்தில் உள்ள சன்வர்தம் பாலம் இன்று இரவு 7 மணிக்கு இடிந்து விழுந்ததில் 50 பேர் ஆற்றில் விழுந்தனர்.

இந்த பாலம் மிகவும் பழமையானது. அதனால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. பாதசாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ எத்தனை பேர் ஆற்றில் விழுந்தார்கள் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் சுமார் 50 பேர் வரை விழுந்திருக்கலாம். மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது வரை யாரும் இறந்ததாக தகவல் வரவில்லை’’ என்றார்.

இது வரை 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடக்கிறது. சிலர் நீந்தி கரையேறியுள்ளனர்.

[youtube-feed feed=1]