சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும் நிலையில், பள்ளிகளுக்கான மானியத்தொகை 50% விடுவிக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்த பள்ளிகள், கல்வி நிலையங்கள் செப்டம்பர் 1ந்தேதி முதல் திறக்கப்பட்டு வருகிறது. நவம்பர் 1ந்தேதி 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது. அதுபோல, இன்றுமுதல் வீடு தேல்வி கல்வி திட்டமும் தொடங்கப்படுகிறது.
இநத நிலையில், பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், முன்னேற்பாடுகளுக்காக, பள்ளிகளுக்கான மானிய தொகையில் 50% விடுவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மானிய தொகை ரூபாய் 77.9 கோடியில் 50% விடுவித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.