புதுடெல்லி:
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா எனப்படும் இஸ்லாமிய அமைப்பானது நாட்டில் பயங்கரவாதத்தை தூண்டி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து, அந்த இயக்கத்தை தடை செய்ய கோரிக்கைகள் வலுத்த வருகின்றன. சமீபத்தில், கவர்னர் ஆர்.என்.ரவியுடம், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்றும், இந்த அமைப்பு மனித உரிமைகள் அமைப்புகள் போல, செயல்பட்டு, ஆஃப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்கு சண்டையிட ஆட்களை அனுப்பி வைப்பதாகக் குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்நிலையில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது. இந்த இயக்கத்தின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.