காராஷ்டிரா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 29 மாணவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில், கல்லூரி மாணவர்கள் 40 பேர் சேர்ந்த குழுவினர் ஒரு வாகனத்தில் கோலாப்பூரில் உள்ள பன்ஹால் கோட்டையை காண சென்றுகொண்டிருந்தனர்.  அப்போது,  நாகன்பட்டா பகுதியில் புனே பெங்களூர் நெடுஞ்சாலையில், வேகமாக வந்த லாரி ஒன்று கல்லூரி மாணவர்கள் சென்ற வாகனத்தின்மீது பயங்கரமாக மோதியது.

இந்த சாலை விபத்தில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 29 பேர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட  விசாரணையில், லாரி அதிவேகத்தில் விரைத்து வேன்மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளதாக கூறினர்.