
திருவண்ணாமலை :
கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் இறந்தது தொடர்பான வழக்கில், 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருவண்ணா மலை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கடந்த 2000ம் ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் மரணமடந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராயம் காய்ச்சி திருட்டுத்தனமாக விற்பனை செய்து வந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினார்.
இவ்வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து திருவண்ணாமலை அமர்வு நீதிமன்ற நீதிபதி மகிழேந்தி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும், இதில் ஒவ்வொருவருக்கும் தலா 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]