காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலி

Must read

பதர்வா:

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள பானி என்ற பகுதியில் இருந்து பதர்வா மாவட்டத்துக்கு மினி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.

இதில் 12 பேர் பயணம் செய்தனர். இந்த மினி பஸ் பதர்வா-சோலி நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென அந்த பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கியது.

இதில் நிலைதடுமாறிய பஸ் உருண்டு 1,500 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

உள்ளூர்வாசிகள் மற்றும் மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

More articles

Latest article