நூர்கிராம்

ப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதைந்து 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இரவு ஆப்கானிஸ்தான் நூரிஸ்தான் மாகாணம் நீர்கிராம் மாவட்டத்தில் ஒரு ஒரு சிற்றூரில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதைந்தன.  இந்த வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்..

இந்த தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.  இதுவரை 5 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் உடல்கள் கிடைத்ததாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.  மேலும் 25 பேர் காணவில்லை எனக் கூறப்படுவதால் இங்கு மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். 

இவ்வாறு காணாமல் போனவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுவதால்  தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி பாகிஸ்தானுக்கு மிக அருகில் உள்ளது.  இப்பகுதியில் அதிக அளவில் மலை மற்றும் காடுகள் உள்ளன.