சென்னை:

8வழிச்சாலை திட்டத்தில், நிலம் கையப்படுத்துவது தொடர்பாக   தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட 5 மாவட்ட மக்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அதுபோல உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு திமுக, விசிக போன்ற திமுக கூட்டணி கட்சகிள் வரவேற்பு தெரிவித்து உள்ளது.

அதேவேளையில், அதிமுக கூட்டணியில்  இடம்பெற்றுள்ள பாமகவும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளது.  ஆனால், ஒரே கூட்டணியில் உள்ள  அதிமுகவும், பாஜகவும் உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்வோம் என்று அறிவித்து உள்ளது.

தீர்ப்பு குறித்து தகவல் அறிந்ததும் பாதிக்கப்பட்ட 5 மாவட்ட விவசாயிகளும் பெரும் நிம்மதி அடைந்தனர்.

உயர்நீதி மன்றத்தின்  தீர்ப்புக்கு 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள்  பொதுமக்கள் மிகுந்த  வரவேற்பு தெரிவித்து உள்ளனர். பாதிக்கப் பட்ட மக்கள் இனிப்பு வழங்கி தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கனவே நிலம் கையப்படுத்திய அரசு, சாலை வரும் பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு இடையே  கல் நட்டப்பட்டு இருந்தது.

சேலம் பசுமைவழிச் சாலை திட்டம் ரத்து செய்யப்பட்டதால் சேலம் பகுதி விவசாயிகள் தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாடியதுடன் தங்கள் நிலங்களில் அரசு ஊன்றியிருந்த கற்களையும் பிடுங்கி எறிந்து வருகின்றனர்.

சேலம் பகுதி விவசாயிகள் தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாடியதுடன் தங்கள் நிலங்களில் அரசு ஊன்றியிருந்த கற்களையும் பிடுங்கி எறிந்து வருகின்றனர். பல இடங்களில் இனிப்பு விநியோகித்து தங்களது வாழ்வாதாரம் நீதி மன்றத்தால் காப்பாற்றப்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். இன்றைய தீர்ப்பு தங்களது வயிற்றில் பார் வார்த்திருப்பதாக விவசாயிகள் நெஞ்சுருக தெரிவித்தனர்.