புஷ்பா-2 திரைப்படம் கடந்த வியாழன் அன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.
முதல் நாளில் 294 கோடி ரூபாய் வசூல் செய்து இதற்கு முன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் முதல் நாளில் 232 கோடி ரூபாய் வசூல் செய்ததே இதுவரை சாதனையாக இருந்தது, இந்த சாதனையை புஷ்பா-2 முறியடித்துள்ளது.
அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தனா ஜோடி நடித்துள்ள இந்தத் திரைப்படம் உலகெங்கும் 12,000 திரையரங்குகளில் ரிலீசானது, தமிழ்நாட்டில் 800 திரையரங்குகளில் வெளியானது.
முதல் 4 நாளில் 830 கோடி ரூபாய் வசூல் செய்த இந்தப் படம் விரைவாக 800 கோடியை தாண்டிய முதல் இந்திய படம் என்ற சாதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
முதல் நாள் வசூலை தொடர்ந்து இரண்டாவது நாளில் இதுவரை எந்தவொரு படமும் 200 கோடி வசூல் செய்ததில்லை என்ற நிலையில் புஷ்பா-2 அதிலும் சாதனை படைத்துள்ளது.
வார இறுதி நாட்கள் முடிந்த நிலையில் நேற்று 5வது நாளாக தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
5 நாளில் இந்தியா முழுவதும் ரூ. 709.3 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 171 கோடி என மொத்தம் 880.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
புஷ்பா-2 திரைப்படம் குறைந்த நாட்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.