சினிமாவில் நடிகைகளின் ஆதிக்கம் மிஞ்சிப்போனால் 10 ஆண்டுகள் இருக்கும்.

பிறகு அக்கா, அம்மா வேடங்களுக்கு தாவி விடுவார்கள்.

ஒரு சில நடிகைகள் மட்டுமே 15 ஆண்டுகளை கடந்தும் கதாநாயகியாகவே நடிக்கும் பாக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள். அப்படி பாக்கியம் பெற்ற 5 நடிகைகள் குறித்த பட்டியல் இது :

1999 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான திரிஷா, கடந்த 21 ஆண்டுகளாக ஹீரோயினாகவே இருப்பது சாதாரண விஷயம் அல்ல.

ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சிம்பு என அனைத்து தமிழக ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த ஒரே நடிகை இவர் தான்.

நயன்தாரா, 2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். ஐயா படம் மூலம் தமிழுக்கு வந்தார்.

ரஜினி, விஜய், அஜீத் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் நடித்துள்ள நயன், இன்றைக்கும் தென் இந்தியாவில் நம்பர் -1 கதாநாயகி.

அனுஷ்கா- 2005 ஆம் ஆண்டு நாகார்ஜுனா ஜோடியாக தெலுங்கில் அறிமுகம் ஆனார். அருந்ததி படம் அவருக்கு பிரேக்.

தமிழில் அனுஷ்காவுக்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும், தெலுங்கில் இரு படங்களில் நடிக்கிறார்.

2004 ஆம் ஆண்டு இந்தியில் கதாநாயகியாக அறிமுகமான காஜல் அகர்வால், பிறகு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கொடி கட்டிப்பறந்தார்.

கல்யாணத்துக்குப் பிறகும் கமலஹாசன், சிரஞ்சீவி, நாகார்ஜுனா ஆகியோர் ஜோடியாக நடித்து வருகிறார்.

‘மில்க் பீயூட்டி’ என்று வர்ணிக்கப்படும் தமன்னாவும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திப்படம் மூலம் அறிமுகம் ஆனார்.

தமிழில் சொல்லிக்கொள்ளும் படியாக படங்கள் இல்லை. எனினும் அந்தாதூன் தெலுங்கு ரீ மேக், தனக்கு ரீ –எண்ட்ரி கொடுக்கும் என நம்புகிறார்.

– பா. பாரதி

[youtube-feed feed=1]