குஜராத்:
 
குஜராத்தில் பாதிக்கப்பட்ட  ஒவ்வொரு தலித் குடும்பத்துக்கும் 5 ஏக்கர் நிலம் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படாவிட்டால் ரெயில்களை தடுப்போம் என தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
guja-2
மாட்டுத்தோலை உரித்ததாகக் கூறி நான்கு தலித் இளைஞர்களை பசு பாதுகாப்புக் குழு என்று அழைக்கப்படும்  கும்பலால் கொடு ரமாக தாக்கும் வீடியோ சமுக வலைத்தளங்க ளில் வேகமாகப் பரவியது.
தலித்கள் தாக்கப்பட்டதை  எதிர்த்து  16 பேர்  விஷம்  குடித்து  தற்கொலைக்கு முயன்றனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் கொதிப்படைந்த தலித் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதில் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இறந்த மாடுகளை அரசு அலுவலகங்கள் முன்பும், வீதிகளில் போட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் போலீசுக்கும், போராட்டக்கரார்களுக்கும் நடந்த மோதலில் ஒரு தலைமைக் காவலர் கொல்லப்பட்டார்.
பசு பாதுகாவலர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு தலா 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டு மென்று தலித் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குஜராத்தில் தொடரும்  தலித்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து குஜராத் தலை நகர்  அகமதாபாத்திலிருந்து உனா வரையான 10 நாள் பேரணியை தலித்கள் தொடங்கினர். பேரணி 10 நாட்கள் கடந்து வந்து நேற்று காலை உனா நகரை வந்தடைந்தது.
‘விடுதலைக்கான பேரணி’ என்ற பெயரிட்டுள்ள இந்தப் பேரணியை தலித்துகளை ஒருங்கிணைக்கும் வகையில் நடத்துவதாக ஜிக்னேஷ் மெவானி தெரிவித்தார்.  சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் நாள் முடியும் இந்தப் பேரணி மூலம், இனியும் தங்கள் மீதான தாக்குதல்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை உணர்த்துவதற்காக ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை பல்வேறு தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உனா நகரில் கூடினர்.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர் ரோஹித் வேமூலாவின் தாய் ராதிகா வேமூலா, உனா நகரில் தாக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவரது தந்தை பாலு சர்வய்யா உள்ளிட்டோர் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதையடுத்து குஜராத்தில் தலித் மக்களின்  மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  இதில்  தங்களுடைய பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக கருதப்படும் இறந்த கால்நடைகளை அகற்றும் பணியை இனி செய்ய மாட்டோம் எனவும், ஒவ்வொரு தலித் குடும்பத்துக்கும் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படா விட்டால் குஜராத் வரும் அத்தனை ரெயில்களையும் மறிப்போம் என்று கூறி உள்ளனர்.
 
       தலித் பிரச்சினை காரணமாக  குஜராத் முதல்வர் ஆனந்திபென் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.