புதுடெல்லி:
7 பெரு நகரங்களில் 5 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளின் கட்டுமானப் பணிகள் டெலிவரி காலத்தையும் தாண்டி நடந்து கொண்டிருக்கிறது.
புதுடெல்லி, சென்னை,கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் புனே ஆகிய பெரு நகரங்களில் கடந்த 2013-ம் ஆண்டு 5.6 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
கட்டுமான நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பணத்தை வேறு காரணங்களுக்கு செலவிட்டது போன்ற காரணங்களால், கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் மதிப்பு 4 கோடியே 51 ஆயிரத்து 750 ஆகும்.
குறிப்பிட்ட காலத்தில் வீடுகள் டெலிவரி செய்யப்படாததால், வீட்டை வாங்கியோர் மன உளைச்சலுக்கும், நிதிச் சுமைக்கும் ஆளாகியுள்ளனர்.