சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 4,965 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்தஎண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 1130 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 75 பேர் பலியாகி உள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2626 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்ச உயிரிழப்பாக இதுவரை மாநில தலைநகர் சென்னையில் 1,456 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 201 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 168 பேரும், மதுரை மாவட்டத்தில் 160 பேரும் உயிரிழந்தனர்.
இன்று 4894 பேர் நோய்த்தொற்று குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,26,670 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 70.12 % பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது 51,344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.