சென்னை: தமிழகத்தில் இன்று ஐ.பி.எஸ்.அதிகாரிகள் 49 பேர் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி ஏற்றதுமுதல், நிர்வாக வசதிக்காக, ஐஏஎஸ், ஐபிஎஸ் உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகர காவல் ஆணையர் உள்பட பல ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். இதுவரை 2 முறை காவல்துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது 3வது முறையாக 49 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் மாற்றி உத்தரவிட்டு உள்ளார்.
காவல்துறை நிர்வாக டிஐஜி-யாக இருந்த ஏ.ஜி.அன்பு, வேலூர் சரக டிஐஜி-யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகர காவல் ஆணையராக செந்தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் பலர் மாற்றப்பட்டு உள்ளனர்.