சென்னை: தமிழ்நாடு முழுவதும் 48,187 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 5 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகம் முழுவதும் மழைக்கால பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் இதுவரை  48,187 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. . 48,187 முகாம்களில் 76 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டன. சென்னையில் 3,562 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் தினமும் 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என கூறினார்.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை ஓரிரு நாளில் கிடைக்கும்; இது கவனக்குறைவால் நடந்தது என நேரடியாக ஒப்புக் கொண்டது இந்த அரசு. உண்மையை ஊருக்கு சொல்வோம் என கூறியதுடன்,  சென்னையில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு தேவையான பொருட்கள் கையிருப்பில் உள்ளன. கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் 3,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை டெங்குவால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு கூறினார்.