சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாக வும், பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி நாளையும் தொடரும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
பட்டாசு வெடிக்க 2மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும், பல பகுதிகளில் விதிகளை மீறி பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. இதுதொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், தமிழக மக்கள் பட்டாசுகளை கொளுத்தி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் தூறிய மழையை பொருட்படுத்தாது பட்டாசுகளை விரும்பி வெடித்தனர்.
அந்த வகையில், நேற்று பொதுமக்கள் வெடித்த பட்டாசுகளில், சென்னையில் மட்டும் தற்போது வரை 48 டன் பட்டாசு குப்பைகள் சென்னை மாநகராட்சி சார்பில் அகற்றபட்டுள்ளது. இந்த பணிகள் இன்றும் நாளையும் தொடர்ந்து பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.