புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம் செய்வதில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக இடையே நீடித்த இழுபறி 48 நாட்களுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்த முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி பொறுப்பு ஆளுநர் தமிழிசையை சந்தித்து, அமைச்சர்கள் பட்டியலை வழங்கி உள்ளார்.
புதுவை மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேி நடைபெற்று மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாஜக என்ஆர்காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதால், மாநில முதல்வராக என்.ஆர்.ரங்கசாமி மே 7ந்தேதி பதவி ஏற்றார்.ஆனால், அமைச்சர்கள் பதவி ஏற்காத நிலை உருவானது. பாஜகவினர் துணைமுதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பதவி கேட்டு தொல்லை கொடுத்ததால், அமைச்சர்கள் நியமனம் செய்திவல் குழப்பம் நீடித்து வந்தது. இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் பல முறை சந்தித்து பேசினர்.
இந்த நிலையில் சுமார் 48 நாட்களுக்கு பிறகு தற்போது அமைச்சர்கள் நியமனம் செய்வது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடைய ஒப்பந்தம் ஏற்பட்டள்ளது. அதைத்தொடர்ந்து அமைச்சரவ விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், ராஜவேலு ஆகிய 3 பேர் அமைச்சர்கள் ஆக வாய்ப்பு உள்ளதாகவும், பாஜக சார்பில் அமைச்சர் பதவிக்கு நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கான பட்டியலை முதல்-அமைச்சர் ரங்கசாமி தயார் செய்து, இன்று மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை கவர்னர் மாளிகையில் வழங்கினார்.
அமைச்சர்கள் பட்டியலில் பா.ஜ.க 2 அமைச்சர்கள், என்.ஆர். காங்கிரஸ் 3 அமைச்சர்கள் என 5 பேர் கொண்ட பட்டியல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.புதிய அமைச்சர்கள் ஓரிரு நாளில் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.