சென்னை: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 47வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள டிவிட்டில்  சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர் பெரியார் என புகழாரம் சூட்டி உள்ளார்.

தமிழகத்தின் விடிவெளிள்யின தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரியாரை பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர். பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பெரியாரின் நினைவுநானை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் ஆங்காங்கே பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

[youtube-feed feed=1]