டில்லி

நாட்டில் நடைபெறும் தலா ரூ.150 கோடி மதிப்பீடு செய்யப்பட்ட 478 உள்கட்டமைப்பு பணிகளில் ரூ.4.4 லட்சம் கோடி உபரி செலவு ஆகி உள்ளது.

நாட்டில் பல உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.   இதில் பல பணிகள் ரூ.150 கோடிக்கும் மேல் செலவு மதிப்பில் நடந்து வருகின்றன.   இந்த பணிகளில் பல குறித்த நேரத்தில் முடியாமல் உள்ளன.  இதனால் இந்த பணிகளுக்குத் திட்டமிட்ட செலவை விட மேலும் அதிக செலவாகி வருகிறது.   இது குறித்து புள்ளியல் மற்றும் திட்ட அமல்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் 1768 திட்டங்களில் 478 திட்டங்களுக்கு இதுவரை அதிக செலவாகி உள்ளது.  525 திட்டங்கள் மிகவும் தாமதமாக நடந்து வருகின்றன.  இந்த 1768 திட்டங்களுக்கான கணக்கீடு செய்யப்பட்ட செலவுத் தொகை ரூ.22,86,955.18 கோடி ஆகும்.   ஆனால் இந்த திட்டங்கள் முடிவடையும் போது இதன் மொத்த செலவு ரூ.27,27,220.47 கோடி யாக இருக்க கூடும்.  அதாவது மொத்த செலவு ரூ.4,40,265.29 லட்சம் கோடி அதிக செலவாக உள்ளது.

இதில் 525 திட்டங்கள் இதுவரை தொடங்கப்படவில்லை.  எனவே இவை  திட்டமிட்டதை விட மேலும் தாமதமாக வாய்ப்புக்கள் உள்ளன.  இவை சராசரியாக 46.36 மாதங்களில் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த செலவு அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள், நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிக்கும் தாமதம் ஆகியவை ஆகும்.

ஒரு சில திட்டங்களில் இந்த பணிகள் விரைவில் முடிந்த போதிலும் திட்டம் குறித்த முடிவுகள் எடுப்பதில் தாமதும்,  பல பணிகள் மற்றும் கொள்முதல் ஒப்பந்தப் புள்ளிகள் தாமதம், சட்ட ஒழுங்கு பிரச்சினை தாமதம் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன.  குறிப்பாக கொரோனா தொடர்பான ஊரடங்கினால் தாமதம் என்பது அனைத்து திட்டங்களுக்கும் பொதுவான ஒன்றாகும்.