டெல்லி
தற்போது டெல்லியில் கடும் குளிர் உள்ளதால் இங்கு 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் குளிர்காலம் மிகவும் கொடியதாக உள்ளது. மற்ற ஆண்டுகளை விட. இங்கு கடும் குளிர் உள்ளது. இதனால் டெல்லியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக போக்குவரத்து இங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு தொண்டு நிறுவனம் கடந்த 56 நாட்களில் 474 பேர் குளிரால் இறந்ததாக ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த உயிரிழப்புகள் சாலையோரம் தங்கியவர்களுக்கு கம்பளி போர்வைகள், சூடான தண்ணீர், மறைக்கப்பட்ட தங்குமிடங்கள் இல்லாததால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே இதனைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இருக்கிது. இந்த ஆணையம் இந்த உயிரிழப்புக்கள் குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.