வானா

கொரோனா சிகிச்சைக்காக 45 நாடுகள் கியூபாவிடம் இண்டெர்ஃபெரான் ஆல்பா 2 பி என்னும் மருந்தைக் கேட்டுள்ளன.

Pharmaceuticals. 1987.0781.01, 1987.0781.02.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மிகக் குறைந்த அளவில் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் கியூபாவும் ஒன்றாகும்.  இந்நாட்டின் மருத்துவ வசதிகளால் பாதிப்பு அடையும் நோயாளிகளும் விரைவில் குணமடைந்து வருகின்றனர்.  இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளுக்குக் கியூபாவின் மருத்துவர் குழு சென்று சிகிச்சை அளித்து வருகிறது.

கியூபாவில் தயாரிக்கப்படும் இண்டர்ஃபெரான் ஆல்பா 2 பி என்னும் மருந்து கொரோனாவை குணப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இந்த மருந்து கியூபா நாட்டின் சர்வதேச விஞ்ஞானக் குழுவின் ஜெனடிக் எஞ்சினீரிங் செண்டர் தயாரிக்கும் மருந்தாகும்.

இது கடந்த 1980களில் மூச்சுத்திணறலுக்காக உருவாக்கப்பட்டு எச் ஐ வி, ஹெபாடிடிஸ் பி மற்றும் சி போன்ற நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.  தற்போது 45 நாடுகள் கொரோனா சிகிச்சைக்காக இந்த மருந்தைக் கியூபாவிடம் கேட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே தற்போது கியூபா இந்த மருந்து உற்பத்தியை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.