ரோம்

கொரோனா பரவுதல் குறித்த இத்தாலி மக்களின் எண்ணங்கள் பற்றிய ஒரு செய்திக் கட்டுரையின் தமிழாக்கம்

கொரோனா தாக்குதலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி இருந்த நிலை மாறி தற்போது முன்னேறி உள்ளது..  நேற்றுவரை இத்தாலியில் சுமார் 86500 பேர் பாதிக்கப்பட்டு 9134 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  சீனாவில் 81,394  பாதிப்பு அடைந்தவர்களில்  3295 பேர் மரணம் அடைந்துள்ளனர். பாதிப்படைந்தோர் எண்ணிக்கையில் தற்போது அமெரிக்காவில்  அதிக அளவில் அதாவது ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளனர்.

இத்தாலியின் பிரபல பெண் எழுத்தாளரான ஃபிரான்செஸ்கா மரினோ எழுதி உள்ள செய்திக் கட்டுரையில், “இத்தாலியில் கொரோனா வைரஸ் ஒரு கொள்ளை நோயாகப் பரவி உள்ளது.  இதற்குச் சீனாவின் விளம்பரமே காரணமாகும்.   எங்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் லுயிகி டி மையோ தனது முகநூலில் சீன மருத்துவர்கள் மற்றும் சீனமருந்துகள் இத்தாலிக்கு வரப்போவதாக அறிவித்திருந்தார்.

அத்துடன் சீன தூதரகத்தில் பணி புரிந்த லிஜியன் ஜாவோ தனது டிவிட்டரில் ரோம் நகரில் அனைவரும் சீன தேசிய கீதத்தைப் பாடி சீனாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார்.  அத்துடன் மக்கள்  தங்கள் மாடிகளில் இருந்து சீனா வாழ்க என கொஷமிட்ட்தாக்வும் சீனா இத்தாலியுடன் இணைந்திருக்கும் எனவும் பகிர்ந்திருந்தார்

இவை அனைத்தும் சீனர்கள் அளிக்கும் தவறான தகவல்களின் அடிப்படையில் இடப்பட்டுள்ள பதிவாகும்.  இந்த டிவிட்டர் பதிவில் வெளி வந்த சீன தேசிய கீதத்தை இத்தாலியர்கள் இசைக்கும் ஆடியோ ஒரு போலியானது.  எந்த ஒரு இத்தாலியருக்கும் சீன தேசிய கீதம் தெரியாது என்பதே உண்மையாகும்.

சில தினங்களில் சீனாவின் செய்தி ஊடகமான குளோபல் டைம்ஸ் தனது டிவிட்டரில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் இருந்தே இத்தாலியில் கொரோனா அறிகுறியுடன் கூடிய நியுமோனியா பரவி இருந்ததாகச் செய்திகள் வந்துள்ளன எனப் பதிவு வெளியிட்டிருந்தது.  இந்த செய்திகளை யார் அளித்தது?  இவ்வாறு வைரஸ் பரவுவது குறித்து செய்திகள் வந்துள்ள நிலையில் வுகான நகரத்தில் இருந்து இத்தாலி செல்ல பயணிகளுக்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது

அது மட்டுமின்றி இத்தாலியில் இந்த வைரஸ் உருவானது என்றாலும் சீனா அது குறித்து கண்டனம் தெரிவிக்காததால் இத்தாலியர்கள் சீனாவிடம் நன்றியுடன் உள்ளதாகச் சர்வதேச ஊடகங்களில் சீனா செய்திகள் வெளியிட்டன.

ஆனால் கொரோனா குறித்த எச்சரிக்கையை உலகுக்கு வெளியிட முயன்ற மருத்துவர்களையும் பத்திரிகையாளர்களையும் சிறையில் அடைத்ததால் இத்தாலியர்கள் சீனாவின் மீது கோபத்தில் இருக்கிறோம்.   எங்களிடம் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் மக்கள் ஈக்களைப் போல் செத்து மடிவாதல் நாங்கள் கோபத்தில் இருக்கிறோம்.  நாங்கள் ஊரடங்கு நேரத்தில் இருந்த போது சீன தேசிய கீதத்தைப் பாடியதாகச் செய்தி அளித்தவர் மீது கோபத்தில் இருக்கிறோம்.

இந்த வைரஸ் எங்கிருந்தோ வந்தது எனவும் தங்களுக்கு இதில் தொடர்பு இல்லை எனவும் சீனா தெரிவிப்பதால் நாங்கள் சீனாவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறோம்.  இத்தாலிய மருத்துவமனைகளில் இத்தாலியக் கொடியுடன் சீனக் கொடிகளும் பறப்பதாக வந்த தகவல் நான் என்றுமே காணாத ஒன்றாகும். இந்த பொய்த் தகவலுக்காக நாங்கள் சீனாவின் மீது கோபத்தில் இருக்கிறோம்.

தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் சீனப் பொருட்களை நம்பி இருப்பதால் சீனா இந்த வைரஸுக்கு தாங்கள் தான் காரணம் என்பதை மறைக்க முயற்சி செய்கிறது.    இந்த வைரஸ் காரணமாகச் சீனா லாபம் அடைவதை அனுமதிக்கக்கூடாது.  சீனாவை நாம் இந்த வைரஸால் உலகத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்குப் போர் இழப்பீடு கேட்க வேண்டும்.  இது போர் இல்லாமல் வேறு என்ன?” எனத் தெரிவித்துள்ளார்.