டில்லி,

லைநகர் டில்லியில் கடும் உரை பனி மற்றும் குளிர் காரணமாக கடந்த 7 நாளில் 44 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், 44 பலியானதற்கு டில்லி துணைநிலை ஆளுநரே காரணம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.

வட மாநிலங்களில் நிலவி வரும் உறைபனி மற்றும் கடுங்குளிர் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். மூடு  பனி காரணமாக  சாலை விபத்துக்களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில டில்லியில் நிலவும் கடும் பனி காரணமாக ஜனவரி 1 முதல் 7ந்தேதி வரை 44 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

தலைநகர் டில்லியில் ஆம்ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில கவர்னராக  அணில் பைஜால்  செயல்பட்டு வருகிறார். இவர் பாரதிய ஜனதாவால் நியமிக்கப்பட்டவர்.

ஆட்சியில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கும், துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கிற்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. மாநில அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருவதாக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு தொடங்கி ஒரு வாரத்திற்குள் 44 பேர் பனி மற்றும் குளிர் காரணமாக பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதற்கு காரணம் டில்லியின்  துணை நிலை கவர்னர் தான்  என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.