சென்னை: மத்தியமந்திரி சபை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த பட்டியலில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பெயர் இடம்பெற்றுள்ளது.
மேலும்,‘ காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராத்திய சிந்தியா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த தலைவர் நாராயன் ரானே, அசாம் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்த சோனவால் உள்பட பலரது பெயர் இடம்பெற்றுள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தற்போது 53 அமைச்சர்கள் உள்ள நிலையில், இன்று 6 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் புதியதாக 43 அமைச்சர்கள் இன்று நியமனம் செய்யப்படுகின்றனர். இதன்பிறகு, மோடி அமைச்சரவையின் மொத்தம் 90 அமைச்சர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சர்களாக இன்று பதவி ஏற்கபோகும் 43 பேர் யார் யார் என முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுஉள்ளது.
1. நாரயண் ராணே (மகாராஷ்டிரா), 2. சர்பானந்தா சோனாவால் (அசாம்), 3. வீரேந்திர குமார் (மத்திய பிரதேசம்), 4. ஜோதிராத்ய சிந்தியா (மத்தியபிரதேசம்), 5. ராமச்சந்திர பிரசாத் சிங் (பீகார்), 6. அஸ்வினி வைஷ்ணவ் (ஒடிசா), 7. பசுபதி குமார் பாரஸ் (பீகார்), 8.
கிரண் ரிஜிஜூ (அருணாச்சலபிரதேசம்), 9. ராஜ்குமார் சிங் (பீகார்), 10. ஹர்தீப் சிங் புரி (டெல்லி), 11. மன்சுக் மண்டவியா (குஜராத்) 12. பூபேந்தர் யாதவ் (ராஜஸ்தான்), 13. பர்சோத்தம் ருபாலா (குஜராத்), 14. கிஷண் ரெட்டி (தெலங்கானா), 15. அனுராக் சிங்
தாகூர் (இமாச்சலப்பிரதேசம்), 16. பங்கஜ் சவுத்ரி (உத்தரபிரதேசம்), 17. அனுப்பிரியா படேல் (உத்தரபிரதேசம்), 18. சத்யபால் சிங் (உத்தரபிரதேசம்), 19. ராஜீவ் சந்திரசேகர் (கர்நாடகா), 20. ஷோபனா கரண்டா (கர்நாடகா), 21. பானுபிரதாப் சிங் வர்மா (உத்தரபிரதேசம்), 22. தர்ஷன் விக்ரம் ஜர்தோஷ் (குஜராத்), 23. மீனாட்சி லேகி (டெல்லி), 24. அன்னபூர்ணா தேவி (ஜார்கண்ட்), 25. ஏ.நாராயணசாமி(கர்நாடகா), 26 கவுசல் கிஷோர் (உத்தரபிரதேசம்), 27. அஜய் பட்(உத்தரகாண்ட்), 28. பி.எல் வர்மா (உத்தரபிரதேசம்), 29. அஜய்குமார் (உத்தரபிரதேசம்), 30. சவுகான் தேவுசிங் (குஜராத்), 31. பகவந்த்குபா (கர்நாடகா), 32. கபில் மோரேஸ்வர் பட்டீல் (மகாராஷ்டிரா), 33. சுஷ்ரி பிரதிமா பவுமிக் (திரிபுரா), 34. சுபாஸ் சர்கார் (மேற்குவங்கம்), 35. பகவத் கிருஷ்ணராவ் காரத் (மகாராஷ்ட்ரா), 36.ராஜ்குமார் ரஞ்சன் (மணிப்பூர்), 37. பாரதி பிரவீன் பவார் (மகாராஷ்டிரா), 38. பிஸ்வேஷ்வர் துடு (ஒடிசா), 39. சாந்தனு தாகூர் (மேற்குவங்கம்) , 40., முஞ்சப்பாரா மகேந்திரபாபு (குஜராத்) 41. ஜான் பார்லா, (மேற்குவங்கம்) 42. எல்.முருகன் (தமிழ்நாடு), 43. நிஷித் பரமானிக் (மேற்கு வங்கம்).
இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் – தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?