சென்னை:  தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 42,957 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டைவிட அதிகம் என்பது தெரிய வந்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையைத் தொடர்ந்து, மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து,   தமிழகத்தில் 2024-25 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஜூலை 31-ம் தேதி தொடங்கியது.  இந்தவிண்ணப்பம் ஆகஸ்டு 9ந்தேதி மாலை 5 மணியுடன் ஆன்லைனில் விண்ணப்பிப்பது நிறைவடைந்தது.

இதில்,  நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற  42,957 மாணவ, மாணவிகள்  அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக இடங்களுக்குவிண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து,   தரவரிசை பட்டியலை வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என்றம், வரும் 21-ம் தேதி கலந்தாய்வை தொடங்கும் என்று தமிழ்நாடு  மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறவித்து உள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், 9,050 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.