சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட 42100 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வேலூர் சென்றடைந்தது…

Must read

சென்னை: 16ந்தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ள நிலையில், சென்னையில் இருந்து வேலூர் அனுப்பி வைக்கப்பட்ட 42100 டோஸ் தடுப்பு மருந்துகள், அங்கு பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் சென்றடைந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது.  அதன்படி,  தமிழகத்திற்கு முதல்கட்டமாக புனேவில் இருந்து  5,36,000 டோஸ் தடுப்பு மருந்துகள் நேற்று காலை  சென்னை வந்தடைந்த்ன. அவைகள்  சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள  கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து, பிரித்துபாதுகாப்பாக தமிழகத்தில் உள்ள 10 மண்டலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில்,  வேலூர் மண்டலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட தடுப்பு மருந்துகள், அங்கு பத்திரமாக சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி,  42,100 டோஸ் மருந்துகள் அங்கு சென்றடைந்துள்ளது.
வேலூர் மண்டல அலுவலகத்தில்  இருந்து,  வேலூருக்கு  18600 டோஸ்களும் திருப்பத்தூருக்கு 4700 டோஸ்களும், ராணிப்பேட்டைக்கு  4400 டோஸ்களும்,  திருவண்ணாமலைக்கு  14400 டோஸ்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதுபோல, சென்னையில் அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகள் கோவை மண்டலம் உள்பட பல்வேறு மண்டலங்களுக்கு சென்றடைந்துள்ளது.

More articles

Latest article