டெல்லி: கொரோனாவால் நாட்டின் பொருளாதாரமாக நலிவடைந்து உள்ள நிலையில், இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு குறித்து அறிவிக்கப்படுமா என அனைத்துதரப்பினரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக தொழில் உற்பத்தி முடங்கி உள்ளது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரியை செலுத்த முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. இதனால், மாநில அரசுகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இத ந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 41-ஆவது கூட்டம் இன்று காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பை சரிசெய்வதற்கான நிதி ஒதுக்குவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இருசக்கர வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 28% வரியை குறைக்க வேண்டுமென வாகன உற்பத்தி நிறுவனங்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆலோசனை செய்யப்படும் என நிர்மலா சீத்தாராமன் ஏற்கனவே கூறிய நிலையில், இன்றைய கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.