கரூர்: நடிகர் விஜயின் கரூர் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடைபெற்ற பகுதி, மருத்துவமனை என பல பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடமும், பொதுமக்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெததீசன் நேற்று முதல்நாளாக, கரூர் சம்பவம் குறித்து அதிகாரிகளுடன் விசாரணை நடத்திய நிலையில், 41 பேர் பலியான வேலுச்சாமிபுரத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு ஏராளமான போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார்.
அப்போது அங்கிருந்தவர்களிடம், தவெக பிரசார கூட்டத்துக்கு போலீசார் விதித்த நிபந்தனைகள் என்னென்ன? எந்தெந்த நிபந்தனைகளை எல்லாம் மீறினார்கள். சம்பவ இடத்தில் எத்தனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பன உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். அங்கிருந்த காவல்துறையினர் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் கேட்டறிந்தார்.
பின்னர் கூட்ட நெரிசலில் சிக்கி கரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருப்வர்களை சந்தித்து விசாரித்தார். சம்பவத்தின்போது என்ன நடந்தது, ஏன் நடநந்தது என்பது குறித்து கேட்டறிந்தார்.
‘இதைத்தொடர்ந்து இன்று 2வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. கரூர் உயிரிழப்பு குறித்து, த.வெ.க. நிர்வாகிகளிடமும், சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் சிலரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
ஓரிரு நாள் விசாரணைக்கு பிறகு விரைவில் விரிவான அறிக்கையை அவர் தமிழக அரசிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.