மதுரை: கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் 2.15 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையை தொடர்ந்து, வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுமா என்பது தெரிய வரும்.

‘ தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27ந்தேதி அன்று பிரசாரம்  கரூரில் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார்.  அவருக்கு பிரசாரத்துக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அலைகடலென கூடிய கூட்டத்தில், விஜய் பேசி முடித்து புறப்பட்டபின், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும்,  கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனை  உள்பட  இன்னும் 88 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

‘இது கோர சம்பவம் தொடர்பாக தவெக தரப்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த நிகழ்ச்சியில் சதி நடைபெற்றுள்ளதாகவும், அதனால், தமிழ்நாடு அரசின் விசாரணை முறையாக இருக்காது என்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு இன்று மதியம், நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக, கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு சென்று தவெகவினர் முறையிட்டனர். கரூர் துயரச் சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும், சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்றும் நீதிபதி தண்டபாணி முன்பு தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார், தவெக வழக்கறிஞர் அறிவழகன் உள்ளிட்டோர் முறையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.நிர்மல் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி கூறியதாக தெரிவித்தார்.