சென்னை:
காராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள 400 தமிழர்களை மீட்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் அனைத்து மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்காக சென்ற தொழிலாளர் கள், தொழில் இல்லாமல் வறுமையில் வாடி வருகிறார்கள். மே 4ந்தேதி முதல்வர் மத்தியஅரசு புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்தஊருக்கு அனுப்பி வைக்கலாம் என அறிவுறுத்தி உள்ளது. இதற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம்  சங்லி மாவட்டத்தில் குப்வாட் என்ற கிராமத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்  400 பேர் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை அங்கிருந்து விடுவிக்க மறுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர்நிதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுமீதான விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.