சென்னை:
ற்ற மாநிலங்களிலிருந்து வரும் மக்களைக் கையாள 400 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆகவும், பலி எண்ணிக்கை 66 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக பரிசோதனை மையங்களை கொண்டதாக தமிழகம் உள்ளது என கூறிய அமைச்சர்,  38 அரசு மற்றும் 20 தனியார் மையங்கள் என 58 சோதனை மையங்கள் மூலம் இன்று மட்டும் 11,965 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 2,92,432 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்தம் சோதனையிடப்பட்ட 19 லட்சம் மாதிரிகளில் தமிழகத்தில் தான் அதிகமாக 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.
நாட்டிலேயே 0.68 சதவீதம் என்ற குறைந்த இறப்பு விகிதத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. அதற்கு சிறந்த சிகிச்சை முறைகளே காரணம்.
பிற மாநிலங்களிலிருந்து திரும்பி வருபவர்களை  சோதனை செய்து அவர்களை ஒப்படைப்பது ஒரு சவால் என்று கூறியவர்,  மற்ற மாநிலங்களிலிருந்து வரும் மக்களைக் கையாள 400 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது.
மேலும், வரும் சனிக்கிழமையன்று டெல்லியில் இருந்து  2,100 க்கும் மேற்பட்டவர்களை மாநிலம்  வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.