திரிப்பொலி:

லிபியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 400க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

லிபியா கடற்கரையைத் தாண்டி உள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக குடியேறிய 400க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐநா அகதிகள் அமைப்பு( யுஎன்எச்ஆர்சி) தெரிவித்துள்ளது.

புகலிடம் தேடி குடியேறியவர்கள் லிபியாவின் தலைநகர் திரிபோலிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என யுஎன்எச்ஆர்சி யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

யுஎன்எச்ஆர்சி யும் லிபியாவின் சர்வதேச மீட்புக் குழுவும் மிட்கப்பட்டவர்களுக்கான பல உதவிகளை செய்து வருகின்றனர்.

வட ஆப்பிரிக்க தேசத்தில் பாதுகாப்பின்மை மற்றும் பல குழப்பங்கள் காரணமாக அங்கிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் சட்டவிரோதமாக குடியேறுகிறார்கள் என்றும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பெரும்பாலும் ஆபிரிக்காவை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றும், கடந்த ஆண்டு புலம்பெயர்ந்தவர்களில் 373 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 417 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.