டெல்லி:

ந்தியாவில் உள்ள 736 மாவட்டங்களில் 400மாவட்டங்களில் தொற்று இல்லை என்று கூறிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் குறித்து,  3 மண்டலங்களாக பிரிக்கப்படும்  என தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரேனா பரவல் தடுப்பு நடவடிக்கை  காரணமாக ஊரடங்கை மே 3ந்தேதி வரை நீட்டித்து பிரதமர் அறிவித்தார். இருந்தாலும் 20ந்தேதிக்கு பிறகு குறிப்பிட்ட வகையான தொழில்நிறுவனங்கள் இயக்க அனுமதி வழங்குவதாக அறிவித்தார். அதன்படி வழிக்காட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டன.

புதியதாக கொரோனா தொற்று இல்லாத 25 நகரங்களுக்கு 20ந்தேதியில் இருந்து ஊரடங்கு விலக்கு?

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு, நாடு முழுக்க உள்ள மாவட்டங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.

ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள், ஹாட்ஸ்பாட் இல்லாத மாவட்டங்கள், பசுமை மண்டல மாவட்டங்கள், என்று இவை வகைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவது அதிகமாக இருக்கக் கூடிய பகுதிகள், ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள்.

கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தாலும் கூட, அது கட்டுப்பாட்டுக்குள் இருக்க கூடிய பகுதிகள் ஹாட்ஸ்பாட் இல்லாத மாவட்டங்கள்.

சுத்தமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகள் பசுமை மண்டலங்கள்.

முன்னதாக இன்று காலை  வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட எஸ்பி, மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியதாகவும், அதில்  கிடைக்கப்பெற்ற தரவுகளை வைத்து மாவட்டங்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.

ஹாட்ஸ்பாட் இல்லாத பகுதிகளில், ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு லாக்டவுன் நடைமுறையில், பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்தது.