டெல்லி:

ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1118 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  11,933 -ஆக அதிகரித்துள்ளதாகவும், 1,306 பேர் குணமடைந்துள்ளனர், பலி எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில 52 பேர் ஆகி மொத்த பலி எண்ணிக்கை  392-ஆக உயர்ந்துள்ளதாகவும்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும 9,756 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான  சிகிச்சை பெற்று வருவதாகவும், அதிகப்பட்சமாக மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 3 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2வது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது.  அங்கு 1,600 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதுபோல கொரோனாவுக்கு பலியானவர்களில் 178 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர், குறிப்பாக மும்பையில் மட்டும் 112 பேரும் புனேவில் 35 பேரும் உயிரிழந்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

அதையடுத்து பலி எண்ணிக்கையில் மத்திய பிரதேசம் மாநிலம் 2வது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை   50 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக இந்தூரில் 37 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் டில்லி 3வது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 30 பேர்  உயிரிழந்துள்ளனர்.

மும்பை,  புனே , டில்லி  , இந்தூர், ஆகிய 4 நகரங்களும் இந்திய நகரங்களில் பலியானோர் எண்ணிக்கையில் 57 சதவீதத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 34 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் 660 ஆகவும், குஜராத்தில் 650 ஆகவும் , தெலங்கானாவில் 624 ஆகவும் உயர்ந்துள்ளது. கேரளாவில் 387 பேரும் , கர்நாடாகாவில் 277 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஜம்மு -காஷ்மீர் 278 , மேற்குவங்காளம் – 213 , ஹரியானா – 199 மற்றும் பஞ்சாப் – 176 பேரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 933 என்றும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 392 என்றும், மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.<

இதனிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அடுத்த இரண்டு, மூன்று வாரங்களுக்கு கொரோனாவின் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என கூறியுள்ளார்.

நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நுழையவில்லை என்று ஹர்ஷ் வர்தன் விளக்கம் அளித்துள்ளார்.