தாய்லாந்து மேற்கு பாங்காக்கில் உள்ள காஞ்சனபுரி மாகாணத்தில் , சையோக் மாவட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய புத்த கோவில் உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் பார்வையாளர்கள் புலிகளுடனும், புலிக்குட்டிகளுடனும் செல்ஃபிகள் எடுக்க அனுமதிக்கப்படுவதால் இந்த புத்தக் கோவில் ஒரு சுற்றுலா தலமாகவே மாறிவிட்டது. இந்தக் கோவிலில் வனவிலங்குகள் சித்ரவதைப்படுத்தப்பட்டுவருவதாகவும், கடத்தல் , கள்ள சந்தை விற்பனை என பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வந்தது.
இந்தக் கோவிலுக்கு சென்ற சில பார்வையாளர்கள், இங்கு மக்களுடன் செல்ஃபி எடுக்க ஏதுவாக விலங்குகளை போதை மருந்து கொடுத்து படுக்க வைப்பதாக குற்றம் சாட்டினர். புலிகள் சட்டவிரோதமாக இனப்பெருக்கம் செய்யப்படுவதாகவும் குற்றச்ச்சாட்டுகளை மறுக்கின்றனர். இந்நிலையில் தான், தற்பொழுது தாய்க் கோவில் உறைவிப்பானில் 40 புலிக்குட்டி உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புலி பாதுகாப்பு முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவாகப் புதன்கிழமை தாய்லாந்து சர்ச்சைக்குரிய புலிக் கோவிலில் உள்ள ஒரு சமையலறையில் உ ள்ள ஒரு உறைவிப்பானிலிருந்து 40 புலிக் குட்டிகளின் பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டன.
புலிகள் கடத்தல் குறித்த சந்தேகம் மற்றும் துஷ்பிரயோகம் மீது ந்டவடிக்கை எடுக்கப்கோரி சர்வதேச அழுத்தங்கள் காரணமாகத் தாய் வன அதிகாரிகள் உயிருடன் உள்ள விலங்குகளை புலிக்கோயிலிலிருந்து மீட்டனர்.
முக்கிய முன்னேற்றங்கள்:
1. 40 பேர் புலிக்குட்டிகள் ஒரு சமையலறை பகுதியில் ஒரு உறைவிப்பான் உள்ள கண்டெடுக்கப்பட்டதாக , தாய் அரசு அதிகாரி கூறினார்.
2. “இந்த 40 குட்டிகளை வைத்து இருந்ததற்கு ஒரு முக்கிய வியாபார நோக்கம் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார். “ஆனால் அது என்ன என்பதை என்ன்னல் யூகிக்க முடியவில்லை”.
3. அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை முதல் தாய் கோவிலில் இருந்து 52 உயிருள்ள புலிகளை மீட்டுள்ளனர். இன்னும் 85 புலிகள் அங்கு மீதம் உள்ளன. இந்த முறை எங்களிடம் நீதிமன்ற அனுமதி இருந்ததால் இது சாத்தமாயிற்று” என அடிஸர்ன், Adisorn கூறினார்.
4. தற்பொழுது இந்தக் கோவில் மீது வன கடத்தல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டதுக் குறித்து சந்தேகத்தின் காரணமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
5. அரசின் கட்டுப்பாட்டின் கீழ் புலிகள் கொண்டுவரவேண்டும் எனும் கோரிக்கை துவங்கிய 2001 ல் இருந்து நீடித்து வந்த ஒரு இழுபறி போருக்கு ஒரு முடிவாய் திங்களன்று தொடங்கிய தேடுதல் வேட்டை உள்ளது.
6. தாய்லாந்து நீண்ட காலமாகவே வனஉயிரினங்கள் மற்றும் வன பொருட்களை சட்டவிரோத கடத்து தொழிலுக்கு முக்கிய மையமாக இருந்தது.
7. அயல்நாட்டு பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன, இன்னும் சில அருகிவரும் இனங்கள், அடிக்கடி தாய்லாந்து சந்தைகளில் விற்பனை காணலாம்.
8. கோவிலின் மதகுருக்களின் கருத்தை உடனடியாகக் கேட்டுப்பெற முடிய வில்லை.
9. செவ்வாயன்று, மிருகவதை தடுப்புக் குழு தாய் கோவில் “விலங்குகளின் நரகமாகத் திகழ்ந்தது. எனவே சுற்றுலா பயணிகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள விலங்கு காட்சியகங்களை புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
10. புலியின் பாகங்கள் பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.