சேலம்
சேலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் காலில் உள்ள 10 விரல்களின் நுனியை மடக்கி நடந்து சாதனை செய்து இந்தியா புக் ஆஃப் ரெகார்டில் இடம் பிடித்துள்ளார்.
சேலம் நகரில் தாதகாப்பட்டியில் வசித்து வரும் விஜய் ஆனந்த் ஹோமியோபதி மருத்துவர் ஆவார். இவர் மனைவியும் ரேவதியும் ஒரு மருத்துவர் ஆவார். இவர்களின் மகனான ஸ்ரீஜித் என்னும் 4 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் எல் கே ஜி வகுப்பில் படித்து வருகிறார்.
ஸ்ரீஜித் தனது காலில் உள்ள 10 விரல்களின் நுனியை மடக்கி நடந்து பயிற்சி செய்து வந்தார். தனது தொடர் பயிற்சி காரணமாக இவர் 250 அடி தூரம் வரை இவ்வாறு நடக்கும் திறனைப் பெற்றுள்ளார். ஒரு தனியார் மண்டபத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஒரு நிகழ்வில் ஸ்ரீஜித் தனது காலின் 10 விரல் நுனியை மடக்கி நடந்து 250 அடி தூரத்தை 1.27 விநாடிகளில் கடந்துள்ளார்.
ஸ்ரீஜித் செய்த இந்த சாதனையை அவர் பெற்றோர் வீடியோவில் பதிவு செய்து உரிய ஆவணங்களுடன் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸுக்கு அனுப்பினர். இந்த சாதனையை ஏற்ற இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் ஸ்ரீஜி துக்கு கடந்த வாரம் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி உள்ளது. இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் இணையப் பக்கத்தில் அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.