4ஆண்டு சிறை: சசிகலா சீராய்வு மனு மீது இன்று உத்தரவு?

டில்லி,

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு மீதான உத்தரவு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் அவல், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்று புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்தும் இன்று உத்தரவு வெளியிடப்படும் என தெரிகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா தங்களது சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி  தாக்கல் செய்த மனுமீது நேற்று விசாரணை நடைபெற்றது. அதையடுத்து, மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது தள்ளுபடியாகுமா என்று இன்று உத்தரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணை  உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்தவராய் கோஷ், பாப்டே அமர்வு முன்பு  நடைபெற்றது.
English Summary
4-year jail term: Sasikala review petition judgement today