சென்னை

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்  4 ஏ டி எஸ் பி க்களை இடமாற்றம் செய்துள்ளார்.

இன்று தமிழக காவல்துறையில் 4 ஏ.டி.எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் ஏ.டி.எஸ்.பியாக இருந்த மணிகண்டன், நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் ஏ.டி.எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவின் ஏ.டி.எஸ்.பியாக இருந்த பிரேமானந்தன், கோவை மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவின் ஏ.டி.எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி காவல்துறையின் தலைமையக ஏ.டி.எஸ்.பியாக இருந்த தங்கவேல், காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் ஏ.டி.எஸ்.பியாகவும், திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவின் ஏ.டி.எஸ்.பியாக இருந்த சவுந்தரராஜன், நீலகிரி மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவின் ஏ.டி.எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.