ராமேஷ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரையும், அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். இது மீனவர்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. ஒவ்வொரு முறையும், எல்லை தாண்டியதாககூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் அத்துமீறுவதும், அவர்களை கைது செய்வதுடன், அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இது தொடர்கதையாக உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இறுதியான முடிவு எடுக்காமல், கைது செய்யப்படுவதும், அதைத்தொடர்ந்து தமிழகஅரசு கடிதம் எழுதுவதும், பின்னர் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், எல்லை தொண்டடியதாக கூறிய விசைப்படகுடன் 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். அங்கு விசாரணை நடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 22 ஆம் தேதி காரைக்கால் அடுத்த காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது, அவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய இலங்கை கடற்படை ஆறு நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டது
இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்து விட்டதாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.