சென்னை:
மாநிலத் தலைவர் இல்லாமல் தத்தளிக்கும் தமிழக பாரதியஜனதா கட்சிக்கு பொறுப்பு தலைவர்களை 4 பேரை பாரதிய ஜனதா கட்சித் தலைமை அறிவித்து உள்ளது.
அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருண்ணன், இல. கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், எம்.ஆர். காந்தி ஆகிய 4 பேர் தமிழக பாஜகவின் பொறுப்பு தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக பாஜக மாநிலத்தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக மாற்றப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில், 4 பேரை தமிழக பாரதியஜனதா கட்சியின் பொறுப்பு தலைவர்களாக அகில இந்திய தலைமை நியமனம் செய்துள்ளது.