டெல்லி: இலங்கை கடற்படை கப்பலைக்கொண்டு மோதி 4 ராமேஸ்வரம் மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், இலங்கைக்கு மத்தியஅரசு கண்டனம் தெரிவித்து உள்ளது. டெல்லியில் உள்ள இலங்கை இலங்கை தூதரிடம் மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் ராமேசுவரம் அருகே கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை ரோந்து கப்பல், அந்த மீனவர்களின் படகுமீது கப்பலைக்கொண்டு மீது மோதியது. இதனால், மீனவர்களின் படகுஉடைந்து, மீனவர்கள் கடலுக்குள் மூழ்கினர்.
அவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்து வந்தது. அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மீனவர்கள் 4 பேரின் உடல்களும் இலங்கை கடற்கரையில் ஒதுங்கியுள்ளன. இலங்கை கடற்படையினர் அந்த மீனவர்களை பிடித்து சென்று அடித்து கொலை செய்து கடலில் வீசி விட்டதாக கூறப்படுகிறது.
இதைகண்டித்து ராமேஸ்வரம்மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும், தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்தியஅரசுக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து, டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகள், அங்குள்ள இலங்கை தூதரை அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தனர். அவரிடம் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மத்திய அரசு சார்பில் கண்டன கடிதமும் அவரிடம் வழங்கப்பட்டது.