டில்லி

ருமான வரி செலுத்துவோர் மனதில் கொள்ள வேண்டிய 4 முக்கிய விதிகள் இதோ :

1.       ஊதியம் பெருவோரின் ஊதியத்தில் முதலாளிகள் வரிப் பிடித்தம் செய்து உங்களிடம் படிவம் 16 கொடுப்பதால் உங்களின் பொறுப்பு முடிந்து விடவில்லை.   நீங்கள் உங்கள் வருமான வரிக் கணக்கை வருமானவரித் துறைக்கு அளிப்பது முக்கியமாகும்.

2.       வருமான வரிக்கணக்கு செலுத்த கடைசி தேதி ஜூலை 31 என்றாலும், நீங்கள் அதற்குப் பின்பும் அந்த நிதி ஆண்டு முடியும் முன்பு கணக்கை அளிக்கலாம்.  உதாரணமாக 2017-18 நிதி ஆண்டுக்கான கணக்கை 2019ஆம் வருடம் மார்ச் 31க்குள் அளிக்கலாம்

3.       வங்கிகளின் வட்டி மூலம் வரும் வருவாய்க்கு வரி விலக்கு ரூ. 10000 வரை அளிக்கப்படுகிறது.   ஒருவேளை உங்களின் வருவாய் ரூ.10000 க்குள் இருந்தாலும் அதை உங்கள் வருமானக் கணக்கில் காட்ட வேண்டும்.   இந்த நிதி ஆண்டில் இருந்து முதியோருக்கான வட்டி வருவாய் ரூ.50000 வரை வரி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

4.       ரூ. 50000 க்கு மேல் வாடகை செலுத்துபவர்கள் உங்கள் வாடகைப்பணத்தில் இருந்து டி டி எஸ் (TDS) பிடித்தம் செய்து வாடகை அளிக்க வேண்டும்.   அத்துடன் மறவாமல் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை வீட்டு உரிமையாளர்களின் வரிக்கணக்கில் செலுத்தி விட வேண்டும்.    அதை நீங்கள் செலுத்த வேண்டிய வரியில் காட்டக் கூடாது.

மேற்கூரிய 4 விதிகளையும் வருமான வரிக் கணக்கு செலுத்தும் போது மறவாமல் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.