லூதியானா: பஞ்சாபில் 2 அடுக்குள்ள கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.

அங்குள்ள லூதியானா நகரத்தில் இந்த விபத்து அரங்கேறி உள்ளது. 2 அடுக்குள்ள கட்டடம் சரிந்து விழ, விபத்தில் 4 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். இடிபாடுகளின் போது சிக்கிய 36 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

விபத்துக்குள்ளான கட்டடம் தபா சாலையில் உள்ள முகந்த் நகரில் அமைந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டடத்தின் பெரும்பகுதி இடிந்து விழுந்ததால், அருகிலுள்ள கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]