நேப்பித்தோ: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் காரணமாக அங்கு ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது.

மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய கட்சி வென்றது. அவர்களின் ஆட்சியை ஏற்க ராணுவம் மறுத்ததால் ராணுவத்திற்கும், மியான்மர் அரசுக்கும் இடையே மோதல் மூண்டது. தொடர்ந்து கடந்த மாதம் 1ம் தேதி அந்நாட்டு ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
பின்னர் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களை ராணுவ படையினர் வீட்டு காவலில் வைத்தனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில், மோனிவா நகரப்பகுதிகளில் ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்த, 3 பொதுமக்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது.
[youtube-feed feed=1]