
சென்னை:
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வேலூர் சிறைத்துறை ஆக இருந்த டிஐஜி முகமது ஹனிபா, கடலோர காவல்படை டிஐஜி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடலோர காவல்படை டிஐஜி வனிதா சென்னை ரயில்வே டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
ரெயில்வே டிஐஜியாக இருந்த ஜே.பாஸ்கரன் , வேலூர் சிறைத்துறை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
கோவை டிஐஜியாக இருந்த தீபம் எம் டோனர், திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைசெயலாளர் நிரஞ்சன் மார்டி அறிவித்துஉள்ளார்.
[youtube-feed feed=1]